இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Tuesday, June 8, 2010

பட்டம் ஒன்னும் பெரிசில்ல


அம்மா அப்பா ...

எனக்காக என்னோடு
விடிய விடிய
விழித்திருந்த எங்க ஊரு
தெருவிளக்கு.

மொத்த வெயிலையும்
முழுசாகத் தாங்கிக் கொண்டு
எனக்காக நிழல் கொடுத்த
எங்க ஊரு ஆலமரம்.

கத்திப் படிச்சதால
களைப்பு வந்த நேரத்தில
அழுக்குத் தண்ணி என்றாலும்
அன்போடு கொடுத்த
எங்க ஊரு ஊரணி.

பன்னிரு வருடமாக
பத்திரமா பள்ளி செல்ல
பாதை தந்த குளத்துக்கரை.

மதிய உணவுக்கு
மல்லுகட்டி நின்னு
ஒத்த முட்டைக்காக
ஒருவாரம் காத்துருந்த
எடுத்தாலும் குரையாத
ஆயாவின் ஆப்பைக்கு.

”இத்தனை பிள்ளையில
எவனும் படிக்கவில்லை
எப்பாடு பட்டாவுது
இவன படிக்கவையி”
ஊர்காரங்க சொன்ன
ஒத்த வார்த்தை.

வயிருக்கும் வாயிக்குமே
வாழ்க்கையை தொலைச்சுபுட்டு
வயலும் வரப்புமே
தலையெழுத்து என்றிருக்க
கல்வியின் முதழெழுத்து
கற்றுதந்த
பள்ளிகூட வத்தியார்கள்.

பெளவுர்ணமி இரவு
பகல் சூரியன் எதுவானாலும்
மறுக்காமல் அனுமதிக்கும்
கூரைவீட்டு ஒட்டை.

அடைமழை காலத்துல
அடிக்கிற மழையில
கூரைதண்ணி பட்டு
கிழிந்திட கூடாதென்று
அடிவயிற்றில்
அடைகாத்த
அத்தனை புத்தகத்திற்க்கும்.

வெளையாட்டு
வெளையாட்டு என்று
வெட்டிதனம் செஞ்சாலும்
என்னையும் ஆளாக்கிய
எங்க ஊரு பள்ளிகூடம்.

இத்தனைக்கும் என்னால
செய்ய முடிஞ்சது
இவளவுதான்.

இது ஒன்னும்
பெரிசில்ல
அப்பா உழைப்போட….
அம்மா தியாகத்தோட...

No comments:

Post a Comment