இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Thursday, April 26, 2012

ஏன் வேண்டும் துன்ப திராவிடம் ?

இன்றைய அரசியல் பெருமேடைகள் அணல் இடமாக ஆகிப்போனது. விமர்சகர்களின் விவாதங்கள் விதவிதமாய் விரிகின்றது. இந்த பிரச்சனை இன்னும் நடுத்தர மக்களையும், கிராமத்தில் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்க்காமல் வையிற்றுக்கும் வாயிக்கும் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கும் கடைக்கோடி மக்களுக்கு இன்னும் எட்டி இருக்காது. ஆம் இன்றைய சூழலில் திராவிடம் தேவையற்றது என்று தமிழ் தேசியவாதிகளின் வாதமும்... திராவிடமே தீர்க்கமான தீர்வு என திராவிட கட்சிகளும் மேடைக்கு மேடை விடைதேட முடியா விளக்கங்களுடன் வினாக்களை எழுப்பி வருகின்றது. இன்றைய அரசியல் சூழலில் இந்த விவாதம் தேவையற்றது என நடுநிலையாளர்கள் நினைத்தாலும் எது உண்மை என உணர்வது காலத்தின் கட்டாயம். ஆம் தமிழன் யார் ? அவன் பரம்பரை பரிணாமம் என்ன ? என்று தெரிந்து கொள்வதிலும் அதிலிருந்து ஆரிய, திராவிட மற்றும் தமிழ் தேசிய சிந்தனையின் தோற்றம் என்ன ? அதன் விளைவுகள் என்ன என அறிவது அவசியமாகிறது. தற்போதைய தமிழகத்திற்க்கும் தெற்க்கே இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலின் பரப்புகளில் உலகிலேய மூத்தகுடி என்று சொல்லக்கூடிய தமிழர் குடியும் தமிழர் பூமியும் வியாபித்து கிடந்தது. இந்த தமிழர் பூமியை தற்போதைய தமிழ் நாட்டின் தெற்கு பகுதியான குமரி மாவட்டத்தில் இருந்து உற்பத்தியான குமரி ஆறு மற்றும் பகுருளி ஆறு என்ற இரண்டு வற்றாத ஜீவ நதிகள் பாய்ந்து வளம் கொழிக்க செய்தது. லெமூரியா கண்டத்தில் ஒருபகுதியை குமரியாறும், மறு பகுதியை பகுருளியாறும் பாய்ந்து மொத்த தமிழர் பூமியையும் இரண்டாக பிரித்து குமரிக்கண்டம் மற்று பகுருளி கண்டம் என்றும் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் ஆண்டு வந்தனர். இந்த தமிழர் பெருநிலத்தில் வாழந்த தமிழர்கள் நாக மொழி (ஆதித்தமிழ் மொழி) பேசியவர்கள் என்றும், தோற்றத்தில் பத்து அடி உயரமும் உடையவர்கள் என்றும் மிகுந்த அறிவுத்திறனோடு காணப்பட்டார்கள் எனவும் வரலாற்று பதிவுகள் சொல்லுகிறது. காலம் சிறிது சிறிதாக தமிழர் நிலத்தை இயற்கையின் ஏகோபித்த ஒத்துழைப்போடு விழுங்க ஆரம்பித்தது. விளைவு பறந்து விரிந்த தமிழர் பூமியை படிப்படியாக கடலும் விழுங்க திரும்பிய திசையெல்லாம் தமிழ் இனம் நகர தொடங்கியது. பெரிய பூகம்பங்கள், நெருப்பு மழை என எத்தனையோ இயற்க்கை போர்கள் தமிழர் பெரு நிலத்தில் நிகழ அவற்றை வெல்ல முடியாமலும் பொறுத்துக்கொள்ள முடியாமலும் தமிழர்கள் சிதற ஆரம்பித்தார்கள். இந்த லெமூரியா கண்ட அழிவின் போது தமிழர்களின் அறிவை வெளிப்படுத்தும் பல அறிய படைப்புகள் நூல்கள் கடலின் அடியில் மூழ்கின. இன்றும் இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதியில் தமிழனின் அரண்மனைகள் தமிழன் வாழ்த்த வீடுகள் அமைதியாய் உறங்கி கொண்டு இருக்கின்றன. லெமூரியா கண்ட அமைப்பை வெளிப்படுத்தும் தொல்லியல் ஆய்வும் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இப்படியாக நகர்ந்த தமிழ் இனத்தில் பெரும் பகுதி தற்போதைய தமிழகத்திலும் தமிழ் ஈழத்திலும் வாழத்தொடங்கினார்கள். அன்றைய லெமூரியா கண்ட தமிழனிடம் பசி இல்லை வறுமை இல்லை இயற்கையோடு இயந்த வாழ்க்கை இருந்தது. வரலாற்றை உற்று நோக்கும்போது லெமூரியா கண்ட அழிவிற்கும் தாயக தமிழகத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கும் மிகுந்த காலவேறுபாடு இருப்பதை உணரமுடிகின்றது. முற்றாக கலாச்சாரம் இலக்கியம் என அனைத்தையும் கடலுக்கு காவு கொடுத்து விட்டு வெறும் கையோடு வந்த தமிழன் தனக்கென்று ஒரு அத்தியாயத்தை உருவாக்க எடுத்து கொண்ட கால அளவே அது என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறுகின்றனர். ஏறக்குறைய ஐந்தாம் நூற்றாண்டு (560-590) வாக்கில் பாண்டிய கடுக்கோன் மன்றும் அவருடைய மகனும் ஆகிய மாறவர்மன் இணைந்து மிகப்பெரிய பாண்டிய பேரரசை நிறுவினார்கள். தற்போதைய தமிழர் பூமி, இலங்கை, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளடக்கிய பகுதியை ஒருகுடையின் கீழ் ஆண்டான் பாண்டிய கடுக்கோன். பிறகு ஏழாம் நூற்றாண்டில் பள்ளவவர்கள் ஆட்சி, எட்டாம் நூற்றாண்டில் பறந்து விரிந்த சோழர்களின் ஆட்சி என்று மாறி மாறி வந்தது. பறந்து விரிந்த சோழர்களின் பூமி சோழர்களின் ஆட்சி பதிமூன்றாம் நூற்றாண்டுவரை நீடித்தது. பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுபகுதியில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனால் மறுபடியும் பாண்டிய நாடு எழுச்சிபெற்றது. பிறகு வடக்கில் இருந்து வந்த ஆரியர்களின் ஆதிக்க சக்திகள் மெல்ல மெல்ல தமிழர் பூமியை நெருங்க ஆரம்பித்தது. ஆரியர்களின் கலாச்சாரத்தை உள்ளடக்கிய விஜய நகர அரசுகள் மற்றும் நாயக்கர்கள் கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதி முதல் பதினாறாம் நூற்றாண்டுவரை வரை இங்கே ஆட்சி செலுத்தினர். இதன் இறுதியில் நிஜாம் மற்றும் நாவாப்களின் ஆட்சியில் நாயக்கர்களின் திறமை இன்மையாலும் தமிழர் பூமியில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. ஏறக்குறைய நூறு ஆண்டுகள் (1750-1850) இந்த ஐயோப்பியர்களின் காலனி ஆதிக்கம் தமிழர் பூமியில் வியாபித்துகிடந்தது. 1858 இல் நடந்த சோபி போர் மூலமாக ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் இருந்து பிரிட்டீஷ் ஆதிக்கத்தின் கீழ் தமிழர் பூமி வந்தது. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் தமிழர் நிலம் சேர சோழ பாண்டியர்கள் என்ற மூன்று பெரும் நிலப்பிரிவாக பிரிக்கப்பட்டு மன்னராட்சி முறை இருந்தது. பிறகுவந்த பிரிட்டீஷ் காலணி ஆதிக்கமே தமிழர் நிலத்தில் மன்னராட்சி முறையை முடிவுக்கு கொண்டுவந்தது. இதற்க்கு இடையில் பூம்புகார் போன்ற தமிழர் நிலப்பகுதியை மீண்டும் கடல் விழுங்கியது. ஏறக்குறைய பிரிட்டீஸ் காலணி ஆதிக்கம் 1947 வரை நீடித்ததது. இந்த புள்ளியில் தமிழகத்தில் மன்னராட்சி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு குடியாட்சிமுறை புகுத்தப்பட்டது. இதுவே தமிழனும் தமிழும் கடந்து வந்த வந்த பாதை. இலமூரியா கண்ட நாகர்களின் ஆதி தமிழன் பரம்பரை தொடக்கி ஐரோப்பிய காலணிக்கு விற்ற நாயக்கர்கள் வரை எத்தனையோ ஆதிக்க சக்திகளின் அரசாட்சி என மாறி மாறி வந்து இன்றும் துடிப்போடும் தமிழன் என்ற உணர்வோடும் இருக்கின்றது இந்த தமிழ் சாதி. இதுவே தமிழன் கடந்துவாத கால வரலாறு... வரலாறு இப்படி இருக்க... நாம் விவாதம் திராவிடமா ? தமிழ் தேசியமா ? எங்கே யாரால் எப்படி ??? தோன்றியது அல்லது தொற்றியது இந்த திராவிடம். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கொடுங்கோன்மையில் இருந்து விடுபட நினைத்த மக்கள் ஆங்காங்கே சுதந்திரப்போராட்டம் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியா முழுமைக்கும் ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரஸ். இந்த இந்திய தேசிய காங்கிரஸ் தமிழகத்திலும் இருந்தது. அப்போது தென்னிந்திய பகுதிகளில் மாநிலம் சார்ந்த அரசியலை முன்னெடுக்க எண்ணிய முன்னவர்களால் திராவிடன் பார்டீஸ் என்ற அமைப்பு 1916 ஆண்டு துவக்கப்பட்டது. இந்த திராவிடின் பார்டீஸ் என்ற ஒரு கட்சியை உருவாகிய அமைப்பின் பெயர் தென்னிந்திய சமூக நலஒருங்கமைப்பு (South Indian Welfare Association). எனவே இங்குதான் திராவிட நதி உருவாகியது மற்றும் இந்த நதி உருவாக காரணமாக இருந்தது தென்னிந்திய சமூக நல ஒருங்கமைப்பு. எனவே திராவிடம் பிறந்தது பெரியாரிடம் இருந்து அல்ல மாறாக தென்னிந்திய சமூகநல ஒருங்கமைப்பிடம் இருந்து என்ற உண்மையை திராவிடம் பேசுபவர்கள் அவசியம் உணரவேண்டும். இந்த திராவிடன் பார்டீஸ் பிற்காலத்தில் நீதிக்கட்சி (Justice Party) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்த நீதிக்கட்சி தென்னிந்திய சுதந்திர போராட்ட குழுமத்தால் (South Indian Liberal Federation) தத்தெடுக்க பட்டது . இந்த காலகட்டத்தில் தான் தந்தை பெரியார் இந்த நீதிக்கட்சியின் கொள்கையை வைத்துகொண்டு போராட்ட பாதையை மாற்றி 1944 ஆண்டு திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார். எனவே திராவிட நதி யாராலோ உருவாக்கப்பட்டு 28 வருடம் கழித்து பெரியாரை வந்து அடைந்தது என்ற உண்மையையும் திராவிட அரசியல் வாதிகள் உணரவேண்டும். தந்தை இரண்டு முக்கிய விடயங்களை கையில் எடுக்க நினைத்தார். ஒன்று சமுதாய விடுதலை மற்ற ஒன்று இனத்தின் விடுதலை. இந்த சமுதாய விடுதலையில் வருபவைதான் தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு... ஆனால் இனத்தின் விடுதலையை பெரியார் மிகவும் விரும்பி இருந்தாலும் அது சாத்திய படவில்லை. ஏன் என்றால் திராவிடர் கழகம் என்பது அரசியல் கட்சியல்ல என்பதும் அது ஒரு சமுதாய விடுதலை இயக்கம் என்பதும் நாம் அறிந்ததே. எனவே இந்திய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிய தமிழ் இனத்தின் விடுதலை பெரியாரால் மீட்டெடுக்க சாத்தியபடாமல் போனதற்கு ஒரே காரணம் திராவிடர் கழகம் என்பது அரசியல் சாராத இயக்கம் என்பதால். ஏன் பெரியார் அரசியல் சாராத இயக்கம் கண்டார் ?. பெரியார் வெளிப்படையாகேவே பல நேர்காணலில் சொல்லிய ஒரு விடையம் "நான் இந்த தமிழ் நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவன் மற்றும் இந்த தமிழ் நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை உடையவன்" என்றார். அப்போது பெரியாரின் மீது மிகுந்த மதிப்பும் பெரியாரின் கொள்கையில் மிகுந்த பிடிப்பும் வைத்து இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் சமூக விடுதலையோடு இனத்தின் விடுதலை அவசியம் என்றும் தமிழ் இனத்தின் விடுதலைக்கு பெருந்திரள் அரசியல் மட்டுமே ஆயுதம் எனவும் நம்பினார். எனவே பெரியாரை அடைந்த அந்த திராவிட நதி மேலும் இரண்டு பிரிவாக ஓடத்தொடங்கியது. ஒன்று திராவிடர் கழகம் என்ற தாய் நதி சமூக விடுதலை நோக்கியும், இரண்டாவதாக அறிஞர் அண்ணாவால் 1956 ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் என்ற சேய்நதி அரசியல் மூலமான இனவிடுதலை நோக்கோடு ஓடத்தொடங்கியது. பெரியார் முன்னெடுத்த திராவிடர் கழகம் என்ற நதி அவரின் மறைவிற்கு பிறகு அய்யா வீரமணி அவர்களால் கையாளப்பட்டு இன்று நாசமாய் போனது. இன்று திராவிட கழக தலைவர் ஒரு அரசியல் புரோக்கர் போல நடந்து கொண்டு ஒரு அற்ப்புதமான சமூக விடுதலையை நோக்கி ஓடிய நதியை கூவமாய் மாற்றி பெரியாரின் சொத்துக்களுக்கும் செல்வாக்கிற்கும் ஒரு அறிவிக்க படாத ஆளுநரை போல் ஆனார். சரி பெரியாருக்குப்பின் மூல தாய் நதிதான் மோசமாய் போனது என்றிருக்க கிளைநதி எப்படி என்ற கேள்விக்கு வருவோம். தந்தை பெரியாரிடம் இருந்து அண்ணாவால் பிரிக்கப்பட்ட இனவிடுதலைக்கான திராவிட முன்னேற்ற கழகம் கிளை நதி அண்ணாவின் தியாகத்தாலும் ஆற்றல் மிகு பேச்சளாலும் தமிழகமெங்கும் ஓடத்தொடங்கியது. காங்கிரசின் இந்தி திணிப்பு அதற்க்கான இந்தி எதிர்ப்பு என சமூகத்தளங்களில் இந்த நதி பலம்பெற தொடங்கியது. தமிழ் நாட்டில் 1960 ஆண்டு வாக்கில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் மிகுந்த சிரத்தையோடும் அர்ப்பணிப்போடும் நடந்துகொண்டிருந்தது. அறிஞர் அண்ணாவின் ஆற்றல் மிகு பேச்சு இந்தி திணிப்பின் மீதான மக்களின் எதிர்ப்பு இவை இரண்டும் அறிஞர் அண்ணாவை 1967 ஆண்டு தமிழக முதல்வராக்கி அழகு பார்த்தது. ஏறக்குறைய 11 ஆண்டுகால அரசியல் பணி, தியாகமிகு உழைப்பு என அத்தனையும் சேர்ந்து அந்த திராவிட நதியின் கிளையை அழகுபடுத்தியது. தமிழ் இனம் விடுதலை அடைந்துவிடும் தமிழனின் உரிமைகள் காக்கப்படும் என்று அனைவரும் இன்புற்றிருக்க இந்த இன்பம் இரண்டு ஆண்டுகளே நிலைத்தது. ஆம் 1967 அறிஞர் அண்ணா காலமானார். அப்போது திராவிட முனேற்ற கழகத்தில் பலரும் அறிந்த நபர்களாக அடுத்த முதல்வராகும் தகுதியோடும் இருந்தவர்களில் நெடுன்செழியனார், கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகியோர். கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் இவர்களை விட மூத்தவர் நெடுசெழியனார். ஆனால் நெடுன்செழியனாருக்கு கிடைக்கவேண்டிய முதல்வர் பதவி வஞ்சகத்தினால் கலைஞர் கருணாநிதி கையிடம் சென்றது. 1969 ஆண்டில் கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வரானார். இந்த இடத்தில் இருந்தே கருணாநிதியில் சுயநலம், ஊழல் என எத்தனையோ மாசுக்கள் இந்த திராவிட நதியில் கலக்க தொடங்கியது. திமுகவையும் திராவிட கொள்கையையும் பட்டி தொட்டிகளில் திரைப்படத்தின் மூலமாக சேர்த்த பெருமை எம்ஜியாரையே சாரும். இப்படியே மாசுகளந்த நிலையிலேயே ஓடிய இந்த திராவிட நதி 1972 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் அவர்களால் இடண்டாக பிரிக்கப்பட்டது. அனால் என்ன ஒரு கொடுமை என்றால் தமிழர்களை முன்னேற்றவந்த அரசியல் இயக்கங்கள் எதுவும் தமிழனையோ தமிழையோ முன்னிறுத்த மறந்து போனது. எம்ஜிஆர் அவர்கள் 1972 அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார். கருணாநிதியின் வஞ்சகம் சூழ்ச்சியை மற்றும் எம்ஜிஆரிடம் காணப்பட்ட திரைப்பட கவர்ச்சி என அனைத்தும் ஆட்சி அதிகாரத்தை எம்ஜிஆரிடம் 1977 ஆண்டு கொடுத்தது. எம்ஜிஆரின் அதிமுகவில் திராவிடம் என்பது அவரது கட்சியின் பெயரில் மட்டுமே இருந்தது தவிர எம்ஜிஆரிடம் அது இல்லை. இவரை மக்கள் மத்தியில் வெற்றி பெறவைத்தது திராவிட கொள்கையோ அல்லது எம்ஜிஆரின் ஆற்றல் மிக்க பேச்சோ அல்ல. திரைப்பட கவர்ச்சி. அதனை தொடர்ந்து எம்ஜியார் கொண்டுவந்த பலத்திட்டங்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை எம்ஜிஆரின் அடிமைகளாக்கியது. எம்ஜிஆர் அவர்கள் 1977-1987 வரை பதவியில் இருந்தார். எம்ஜியாரால் பிரிக்கப்பட்ட இந்த கிளை நதியும் சிறிது தூரம் கொள்கை இல்லாவிட்டாலும் மக்களை கவர்ந்த அரசியல் என்ற நோக்கில் கடந்தது. 1987 ஆம் ஆண்டு இந்த எம்ஜிஆர் மரணமடைய இந்த அதிமுக என்ற திராவிட கிளை நதி அதிகாரம் ஜெயலலிதாவிடம் சென்றது. அந்த புள்ளியில் பிளவு பட இருந்த இந்த நதி ஆதிமுக ஜெயாவால் ஒன்றினைக்கப்பட்டது. எம்ஜிஆர் என்ற ஒருவர் ஒரு மாபெரும் மக்கள் சக்தியை பார்ப்பணிய பிரதிநிதியாக விளங்கும் ஜெயலலிதாவிடம் அடகுவைத்துவிட்டு சென்றுவிட்டார். ஆட்சியின் அரசர்கள் மட்டுமே மாறியதே தவிர அதிமுக கட்சியின் அடிமைகள் இன்றும் மாறவே இல்லை. இன்று இந்த திராவிட கிளைநதி ஒரு பங்குசந்தை கம்பெனி போல் செயல்படுகிறது. கலைஞரின் துரோக அரசியல் மற்றும் ஊழல் அரசியல் இன்னும் ஒரு கிளை நதியை திமுகவில் இருந்து பிரிய செய்தது. கலைஞரின்பால் மிகுந்த அன்பு கொண்டவரும் கலைஞரின் அமைச்சரவையில் மிகுந்த எதிர்கால எதிர்பார்ப்போடும் படைதிரட்டும் பேச்சற்றலோடும் வீற்றிருந்த வைக்கோ தலைமையுடன் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மறுமலர்ச்சி திராவிட முனேற்ற கழகம் என்ற மற்றும் ஒரு திராவிட கிளைநதியை உருவாக்கினார் . 1994 ஆண்டு இந்த இயக்கம் கட்டப்பட்டதன் நோக்கம் கலைஞரின் எதிர்ப்பு அரசியல். உண்மையிலேயே கலைஞரின் திராவிட கொள்கையில் நம்பிக்கையற்று போயிருந்தால் புதிதாக தொடங்கிய கட்சிக்கு தமிழையோ தமிழனையோ முன்னிறுத்தும் பெயரை வைத்து இருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. திராவிடம் என்ற சொல்லை சுமந்து கொண்டே செல்ல துணிந்தது இந்த நதியும். அரசியல் என்ற நோக்கிலும் தேர்தல் என்ற நோக்கிலும் தேர்தலுக்கு தேர்தல் இரண்டு திராவிட நதிகளோடும் மாறி மாறி கைகோர்த்துக்கொண்டு நானே அண்ணாவின் மாற்று மற்றும் நானே பெரியாரின் மாற்று என களத்திலே கதைக்கிறது இந்த மதிமுக. இதில் என்ன ஒரு பித்தலாட்டம் என்றால் எப்படி ஒரே கட்சி அண்ணாவின் மாற்றாகவும் பெரியாரின் மாற்றாகவும் இருக்க முடியும் ?. பெரியாரின் மாற்று என்றால் தேர்தல் களத்தை விரும்பாதவர் சமூக விடுதலைக்கு போராடுகிறவர். உண்மையான அண்ணாவின் மாற்று என்றால் பெரியாரின் சில கருத்துகளில் முரணுடையவர். எனவே மதிமுக என்ற கிளைநதி ஒரே நேரத்தில் அண்ணாவின் மாற்றாகவோ அல்லது பெரியாரின் மாற்றாகவோ இருக்க முடியாது என்பதும் அப்படி கூறினால் அது ஏமாற்று என்பதும் நிதர்சனமான உண்மை. இன்னும் ஒரு திராவிட கட்சி எல்லாத்திற்கும் திராவிட கட்சிர்க்கும் மாற்று நானே என்று களத்தில் இருக்கின்றது... இன்றைய நிலையில் எதிர்க்கட்சி தலைவராக வீற்றி இருகின்றது. ஆம் தனது பணம் மற்றும் இதுவரை ஓடிய திராவிட நதிகளின் அதன் கிளைனதிகளின் தூய்மை இன்மை போன்ற வாதங்களை முன்னிறுத்தி நடிகர் விஜயகாந்த் தலைமையில் 2005 இந்த கட்சி ஆரம்பிக்க பட்டது. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம். அடப்பாவிகளா தெலுங்கர் தேசத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கினால் அவரது கட்சிக்கு தெலுங்குதேசம் என்று பெயர் சூடுகிறார். தமிழ் நாட்டில் கட்சி தொடங்கும் நடிகர் மட்டும் தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம். இவர் முன்னிறுத்துகிற தேசியம் என்ற சொல் எதை குறிக்கின்றது ? தமிழ் தேசியமா ? இல்லை திராவிட தேசியமா ? இல்லை இந்திய தேசியமா ? அவருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரனுக்குமே வெளிச்சம். இப்படித்தான் இந்த திராவிட நதிகள் இந்த தமிழ் நாட்டில் ஓடி கொண்டி இருக்கின்றன். 1916 தொடக்கி இன்றுவரை (2012 ) அனேகமாக 96 வருடமாய் ஓடி கொண்டிருக்கின்றது இந்த நதி. இந்த நதியின் ஓட்டத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜியார் இவர்களின் கைகளில் கொஞ்சம் தூய்மையாக ஓடியது. ஆனால் இன்று இந்த திராவிட நதியால் தமிழகம் அடைந்து விட்ட நன்மை என்ன? ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாக ஓடிகொண்டிருக்கும் திராவிட நதி உண்மையிலேயே தமிழனுக்கு நண்மை விளைவித்து இருக்கும் என்றால் இந்நேரம் பாலாரும் தேனாறும் அல்லவா இந்த தமிழகத்தில் ஓடி இருக்கும். இந்த திராவிட நதி தமிழனுக்கு என்ன செய்தது ? ஆத்தோரம் தேக்குமரம்... அலைமோதும் காவேரி... பார்திறக்க நெல் விளையும்... பஞ்சம் தீர்க்கும் சோழநாடு... அன்று அலைமோதிய காவிரியின் கனவை கண்களில் சுமந்து கொண்டு கண்ணடத்தானிடம் இருந்து மீட்க்க இன்று தமிழன் அலைமோதுகின்றான். கிடைத்ததா தீர்வு ?. அதிமுக-திமுக என்ற திராவிட கட்சிகளின் வல்லமை மல்யுத்தத்தில் பறிபோனது காவிரியின் உரிமை. உலகிலேயே விலை உயர் கடல் செல்வங்களை கொண்டது மன்னார் வளைகுடாவும் அதனை ஒட்டிய கட்சதீவும். தமிழக மீனவனின் வாழ்வாதாரமாக விளங்கிய கட்சித்தீவை இலங்கைக்கு தாரை வரத்து கொடுத்தது கருணாநிதியின் திராவிட நதி. 1974 ஆம் ஆண்டு மத்திய தொகுப்பு நிதியில் இருந்து பல கோடிகளை கலைஞர் கையாடல் செய்ய அதற்க்கு கச்சதீவை விட்டுகொடுக்கும் உரிமையை ஈடாக கேட்டது மத்திய அரசு. கட்ச தீவு கைநழுவி போனது. இந்த திராவிடகட்சிகளுக்கு கச்சதீவு என்பது ஞாபகத்திற்கு வருவதே தேர்தல் நேரத்தில்தான். இன்றுவரை ஏறக்குறைய 700 மீனவர்கள் படுகொலை ஆகி இருக்கின்றார்கள். ஒருபதிலும் இல்லை மத்திய அரசிடம் இருந்து. இதுதான் இந்த திராவிட நதி சாதனை. திரும்பிய திசையெல்லாம் தமிழனை போராடவைத்து இருக்கின்றது இந்த திராவிட நதி. கேரளாவிடம் முல்லை பெரியாறு ஆணை பிரச்சனை அடுத்ததாக தமிழனின் காவல் தெய்வம் கண்ணகியின் கோவில் பிரச்சனை என கேரளா அரசின் துரோகம். வழக்கம் போல திராவிட கட்சிக்களின் கடிதம். கண்னடத்தில் இருந்து ஒகேனக்கல் எல்லை பிரச்சனை மற்றும் காவிரி நதி நீர் பிரச்னை, ஆந்திர அரசுடன் நதிநீர் பங்கீடு பிரச்சனை இவையெல்லாம் இந்த திராவிட கட்சிக்களின் மல்யுத்தத்தில் மறைந்து கிடக்கின்றன. அடைந்தாள் திராவிட நாடு... இல்லையேல் திருவோடு... ஆம் திராவிட கட்சிகள் நாட்டின் அதிகாரத்தை அடைந்து விட்டது... பூர்வீக தமிழனின் கையில் திருவோடு இன்று... இதெல்லாம் கூட ஒருபுறம் இருக்கட்டும் உலகே பார்க்க பார்க்க ஏறக்குறைய அருபதாடுகால விடுதலை போராட்டத்ததை கொச்சைபடுத்தி ஏறக்குறைய இரண்டு இலட்சம் மக்களை கொன்று குவித்தது சிங்கள இனவெறி அரசு. தமிழனின் தொப்புள் கொடி உறவுகளை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் வாய் மூடி மவுனமாக கண்டு ரசித்தது. ஒரு திராவிட நதியின் தலைவர் "மழைவிட்டாலும் தூவானம் விழத்தானே செய்யும்" என்றார். இன்னொரு திராவிட நதியின் பார்ப்பண வாரிசு "போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்" என்றது. எந்த காங்கிரசை தீர்த்துகட்டவேண்டும் என்று ஊற்று எடுத்ததோ அந்த திராவிட நதி இன்று காங்கிரசோடு கைகோர்த்து தமிழனை நாதியற்றவனாக ஆக்கி இருக்கின்றது. திராவிடம் என்பது அற்ப்புதமான அரசியல் கொள்கை... ஆனால் அது தமிழனால் உருவாக பாடவும் இல்லை இன்று வரை தமிழனால் கையாளப்படவும் இல்லை என்ற கசப்பான உண்மையை உணரவேண்டும். திராவிடம் என்பது தமிழினத்திற்கு உணவுதான்... அனால் விசமிகள் கைப்பட்டு இன்று விசமாய் போனது. தென்னிந்திய சமூக நல மையத்தினால் ஊற்று கொண்ட இந்த திராவிட நதி பெரியாரின் கைவண்ணத்திலும் அண்ணாவின் கைவண்ணத்திலும் சற்று தமிழனின் தாகம் தீர்த்தது ஆனால் எங்கு கலைஞரின் சகாப்த்தம் ஆரம்பிகின்றதோ அங்கிருந்தே திராவிடம் என்பது விஷமுடைய பாம்பு போலாகிவிட்டது. அதன் பிறகு அதில் இருந்து தோன்றிய அனைத்து திராவிட கட்சிகளுமே பாம்பின் குட்டிகள். பாம்பு விஷமானது என்றால் பாம்பின் குட்டிகளும் விசமுடையது என்பது இயற்க்கை. வெறும் தத்துவார்த்த ரீதியில் நீங்கள் திராவிடத்தை அணுகினாலும் தத்துவத்தின் வெற்றி தத்துவத்தை பின்பற்றும் பிரதி நிதிகளிடம் இருந்தே தொடங்குகிறது. எப்படி கிறிஸ்த்துவத்தின் வெற்றி ஏசுபிரானின் எளிய அணுகுமுறையில் இருந்து தொடங்கியதோ, எப்படி வெறும் 22 நபர்களுடன் காட்டிற்குள் நுழைந்து உலகையே திரும்பிப்பார்க்க செய்த புலிகளின் வீரம் பிரபாகரன் என்ற பெரும் தலைவனிடம் இருந்து தொடங்கியதோ அதே போலத்தான். இன்று சமூக தளத்தில் திராவிட சமூக கொள்கை என்ற நதியின் நாட்டாமை கி வீரமணி இன்று என்ன கொள்கையை கடைபிடிக்கிறார் ? திராவிட கொள்கையின் மற்றொரு பரிணாமம் என்று சொல்லக்கூடிய அரசியல் பிரிவின் அதிபதி என்ன செய்கிறார் ? வாரிசுகள் காலகஸ்த்தி கோவிலில் சிறப்பு பூசைகள் செய்கிறது. கோடிகளை கொள்ளையடித்து குடும்பத்தில் பதுக்கிவிட்டு கொடிநாள் காசு கேட்டு கட்டுரை எழுதுகிறார். கர்ச்சிலையை கடவுள் என்று நம்புகிறாயே.... கர்ச்சிலை பேசுமோ... என்று திராவிட வசனம் எழுதியவர்கள் இன்று மஞ்சள் துண்டே மகிமையானது என்று பகுத்தறிவு பாடம் படிக்கின்றார். இவர் எந்த கர்ச்சிலை சொல்லி மஞ்சள் துண்டு போட்டார் என்பது கர்ச்சிலைக்கே வெளிச்சம். எனவே திராவிடம் என்பது அரசியல் ரீதியாகவும்... கொள்கை ரீதியாகவும் தோற்றுபோய் இருக்கின்றது இன்று. திராவிடத்தின் ஆரம்பமும் தமிழன் கையில் இல்லை நூறாண்டுகால திராவிடத்தின் ஆளுமையும் தமிழன் கையில் இல்லை. இப்படி தமிழன் கை படாத... தமிழன் ஆளுமை செய்யாத ஒரு கொள்கையும் அரசியல் பாதையும் தமிழனுக்கு உகந்ததாக பார்க்கும் பார்வை ஒரு மாயையே.... லெமூரியா கண்டம் வாழ்க்கை தொடங்கி ஈழம் வரை தமிழனின் வாழ்வாதார உரிமைகளை தமிழன் கையகபடுத்த முடியாமல் போனதற்கு முழுமுதற்காரணம் தமிழனுக்கு என்று தமிழனின் கையில் ஒரு அரசியல் கொள்கையோ ஒரு அரசியல் புரட்சியோ இல்லாமல் போனதே. தமிழன் அழும் போது கண்களை துடைக்காத திராவிடம், தமிழனின் வாழ்வாதாரமான வயல்வெளிகள் வறண்டு போன நேரத்தில் தண்ணீரை தராத திராவிட நதி, தமிழ் பெண்களின் கற்ப்பினை காக்காத திராவிட கைகள், தமிழனின் காயத்தை ஆற்றாத திராவிட மருந்து இனிமேலும் தமிழனுக்கு வாழ்வளிக்கும் என்று நீங்கள் நம்பினால் உங்களைவிட ஒரு மனநோயாளி உலகத்தில் இருக்க மொடியாது. தமிழனின் தேவை தமிழனுக்கான அரசியல். தமிழன் நலம் காக்கும் தமிழ் தேசிய அரசியல். இதுவே வருங்கால தமிழ் இனத்தின் மீட்சியின் பாதை... எப்படி பிரபாகரனின் எளிமையும் அர்ப்பணிப்பும் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு வீரம் சொரிந்த ராணுவத்தை கட்டமைத்ததோ அதேபோல் தியாகமும் அர்ப்பணிப்பும் நிறைந்த தமிழ்தேசிய அரசியலை சீமானின் போர்க்குணமும் விடாமுயற்சியும் வெற்றி பெற செய்யும்.

No comments:

Post a Comment