இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Monday, March 23, 2009

தமிழ் புலிகளாக மாறவேண்டும் ...................

நம் உணர்வாளர்களின் இடைவிடாத போராட்டத்தினால் எப்பொழுதும் ஈழத்தை பற்றி நினைக்காத ஜெயலலிதா உண்ணாவிரதம், நிதி சேகரிப்பு என்ற முடிவிற்கு தள்ளப்பட்டதே மிகப்பெரிய வெற்றி ... ஏனெனில் ஈழத்தை எதிர்த்தல் வெற்றிபெற முடியாதது என்பதை உணர்ந்த்துவிட்டார்.. ஆனால் தமிழனை பணத்தால் அடிமைசெய்துவிடல்லாம் என்ற நினைப்பில் கருணாநிதயும், தமிழனை பதவியல் அடிமையக்கிவிடலாம் என்று சோனியும் நினைத்துள்ளனர். நாம் அதற்க்கு பாடம் புகட்ட வேண்டும். நாம் தனியாக தேர்தலை சந்திப்பது என்பது அவர்களுக்கு பின்னடைஉ என்றாலும் அது அவர்களின் வெற்றியை பாதிக்காது. எனவே காங்கிரஸ் கூட்டணியை தோர்க்கடிப்பதான் மூலம், தமிழுணர்வாளர்கள் மட்டுமே தமிழகத்தை ஆளமுடியும் என்ற நிலை உருவாகும். இதுவே நமது நீண்டகால ஏக்கத்திற்கு மருந்தாகும் . அன்பிர்க்குஇனிய உணர்வாளர்களே நாம் அனைவரும் நமது பகுதியில் உள்ளவர்களை சந்த்தித்து சோனியாவின் - கருநாகத்தின் (கருணாநிதி) நச்சினை தொளுரிதுகட்ட வேண்டும். இது கூட ஒருவகை ஈழ மீட்பு போரரட்டம்தான்.. வாருங்கள் புலிகளாவோம்....ஒரு தேசிய இனத்தை மீட்டெடுக்க .....

No comments:

Post a Comment