இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Wednesday, March 25, 2009

இந்த இரவல் சதை வாங்கி... எத்தனைநாள் வாழுவீங்க

தினந்தோறும் எப்படியே செல்கிறது...
மனித மரக்கட்டையை என் வாழ்க்கை...
அப்பாவை ஒருவன் திட்டினான்
அவனை வெட்ட அரிவாள் எடுத்த எனதுகை...
அப்படியே இருக்கிறது.. அசைய மறுத்து..
அன்பு, பாசம், அழுகை, கோபம் என்றெல்லாம்
அன்றாடும் அனுபவித்த இந்த இதயம்
அப்படியே கருகிகிடக்குறது...
அன்பு தங்கையை அவதூறு சொன்னதால்..
அடித்து உதைத்த எனது கால்கள்
அசைய மறுத்து அப்படியே இருக்கிறது..
சொந்தங்களை ஒரு மாதம் பிரிந்ததால்
கண்ணீர் வடித்த எனது கண்கள்
அப்படியே இருக்கின்றது அசையாமல்..
நடைபிணமாக நான் மாறியதன் காரணமென்ன ?
ஈழத்து என்சாதி இறந்துகொண்டிருக்கும்
இந்த வேலையிலும் கூட அன்றாடும்
வாழும் ஆறறிவு மிருகமாய்
என்னால் எப்படி வாழ ஆகும்..
தொப்புள் கோடி உறவு அங்கெ துடிதுடித்து சாகும்போது
தூங்கிடத்தன் மனம்வருமா ?
கண்ணகியாம் என்சாதியின்
கர்ப்பை கதற கதற களவாடும்
கயவர்களை கண்ணெதிரே கண்டபின்னும்...
கண்மூடி தூங்கிட எப்படிடா முடியுது.
கொத்து கொத்தாய் நம் குலத்தை
கொன்றுகுவிக்கும் போது...
என்றும் போலே வழ என்னால் முடியாது..
தான் அடா விட்டாலும் தான் தசையாடும் என்பார்கள்.
இந்த இரவல் சதை வாங்கி
எத்தனைநாள் வாழுவீங்க...
தமிழனின் தாகம்... தமிழீழ தாயகம்....

No comments:

Post a Comment