இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Tuesday, March 24, 2009

ஆறு கோடிகள் பூசிக்கொண்ட அரசியல் சாயமும்... சாயத்தில் மறைந்து போன ஒரு தேசிய இனமும்.....

இதுவரை தமிழகத்தில் தனது சொந்தங்களுக்க அவர்கள் படும் வேதனைகளுக்க பதிமூன்று மனித உயிர் தனது தேக்குமர தேகங்களை தீக்கிரையாக்கி கொண்டது. ஆனால் அனைத்துலக சமுதாயம் எதிர்ப்பர்த்ததுபோல தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஒரு பெரிய எழுச்சி வரவில்லை என்று ஒருசில நடுநிலையாளர்கள் சொல்கிறார்கள். இவர்களின் எண்ணங்கள் இப்படியிருக்க தமிழ் சமுதாய இளைஞர் மற்றும் நடுநிலையாளர்களின் மத்தியில் ஈழப்பிரச்சினை மிகவும் விஸ்வரூபம் எடுத்துஇருக்கின்றது. ஆனால் அதை இந்த உலகத்திற்கு வெளிக்காட்டும் சக்தியுடைய ஊடகங்கள் அனைத்தும் அரசியல்வாதிகளின் கைகளில். ஒருசில ஊடகங்கள் தனியார்களிடம் இருந்தால் கூட அதன் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு உண்மைச்செய்திகளை ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழர்களுக்கு பரப்ப மறுக்கின்றது. அதன் காரணமாகத்தான் ஈழத்திற்கான எழுசிபோரட்டம் தமிழகத்தை பொறுத்தவரையில் அங்கங்கே மந்த நிலைலே நடைபெற்றுகொண்டிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர்கிளின் போரரட்டத்தை அரசியல் நிலைப்பாடாகவே கருதுகின்றது. மாவீரன் பழ. நெடுமாறன், இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி மற்றும் பே. மணியரசன் இவர்களைத்தவிர மற்ற அனைவரும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் போரராட்டத்தை அரசியல் போராட்டமாகவே கருதுகின்றனர். மேலும் சிலர் வாய்கிழிய வசனக்களை பேசிவிட்டு கொலைகாரர்களிடமே கூட்டணிவைத்துகொண்டு கேட்டால் அறியல் ஆதாயங்கள் வேறு! கொள்கைகள் வேறு பேசுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தமட்டில் வழக்குரையர்கள் மற்றும் சட்டத்துறை மாணவர்களின் போராட்டம் மட்டுமே உணர்ச்சிமயமானது. ஆனால் அரசியல் சா(நக்கியர்) என்ற கருணாநிதி அவர்கில் தந்திரமான செயல்பாட்டால் அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை குறைத்துவிட்டார். படிப்படியான மாணவர்களின்மேல் தாக்குதல், வழக்குரையர்கள் மீது தாக்குதல் என்ற பெயரில் போராட்டத்தை திசைதிருப்பிவிடலாம் என்ற கனவில் இருக்கிறார். பரந்து விரிந்த இந்த தமிழ் சமுதாயத்தின் தர்ப்போதைய நிலை வேறுவிதமாக உள்ளது. அங்கங்கே புதிய மாணவர்கள் கூட்டமைப்புகள் உருவாக்கி சப்தம் போடாமல் ஒருவகையான இரகசியமான ஈழப்போராட்டத்தை நடத்திகொண்டிருக்கின்றது. அங்கங்கே காங்கிரஸ் மற்றும் தமிழின துரோகியான தி. மு. க கூட்டணியை தோற்கடிக்க முழுமூச்சுடன் போராட்டக்களத்தில் உள்ளனர். தமிழின போராட்டவாதிகளான விடுதலைப்புலிகளை ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வளர்த்து, பல உதவிகளை செய்த திரு MGR அவர்களின் இயக்கத்தை வழிநடத்துபவர்களுக்கு கூட அந்த கரிசனம் கடைசியில் வந்ததே வருத்தம். இருந்தாலும் அவர்கள் இனி ஈழத்தை ஆதரிக்காவிட்டால் நம்மை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பதை மெல்ல புரிந்துகொண்டார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தேர்தல் பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கபடுகிறது. ஈழப்போராட்டத்தில் எந்தனையோ உயிர்களை இழந்த தமிழ் ஈழம் மற்றும் பதிமூன்று உயிர்களை தீக்கிரையாக்கிய தமிழ் நாடு என்று இருக்கும் இந்த தருணத்தில் இதன் மூலம் தமிழக அரசியல் வாதிகளின் சுயரூபத்தை தமிழகத்தின் நாடு நிலை வாக்காளர்கள் தெரிந்து கொண்டுவிட்டனர். இங்கேயே ஒரு ஈழம் சமைக்கும் போராட்டத்தை மாணவர்கள் சப்தமின்றி செய்துகொன்றுக்கின்றனர் இதன் காரணமாகத்தான் தமிழக ஈழப்போரட்டங்கள் மவுனமாய் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. மாணவர்களின் புரட்சியும், நடுநிலை வாக்காளர்களின் வாக்கின் எழுட்சியும் ஒருங்கே செயல்பட்டால் இங்கே அரசியல் வாதிகள் பூசிகொண்டிருக்கும் சாயமும் அவர்கள் மக்கள் மிது பூசிய சாயமும் கரையும். அப்போது என் தமிழ் சாதியின் உண்ண்மையான நிறத்தை இந்த சர்வதேச சமுதாயம் தெரிந்துகொள்ளும் தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்...

ஈழத்து குருதியலே
ஏழுகோடி எழுதுகிறான்
அரசியல் சாசனத்தை...
அன்புடையீரே நீங்களிடும்
வாக்கினால் காப்பாற்றலாம்
நம் இனத்தை...

என்பதை தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு மாணவர் அமைப்புகள் செயல்பட்டுகொண்டிருக்கின்றது

No comments:

Post a Comment