இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Wednesday, April 1, 2009

அடடா என் சமூகம் அழுதுகொண்டே சாகிறதே...

அடடா என் சமூகம்
அழுதுகொண்டே சாகிறதே...

இனமெல்லாம் பிணமாக கண்டு
மனம் இங்கே வாடுதடா...
ஆயுதம் ஏந்தி ஆழ்கடல் தாண்ட
நாள் ஒன்றை தேடுதடா...

எல்லோருக்கும் உயிர் கொடியை
எப்பவே விட்டிவிட -என்னுடைய
தொப்புள்கொடியை மட்டும்
ஈழம்வரை விட்டுவைத்தாய் ...

என்தனைகோடி இன்பம் படைத்தாய்
இறைவா என்றவனே...விரைவாய்
ஈழத்திற்கு என்சாதி படும் பாட்டினை
எழுதுவாய் உலகத்திற்கு....

அடிமைத்தலையை அறுக்க என்சாதி...
ஆயுதம் துக்குதடா...
அரசியல் நாய்களுக்கு அடிமையாய்
இங்கே கொடியினை சுமக்குதடா...

அம்புளி காட்டி அழகு குழந்தைக்கு
சோறுட்டுகிறாள் இங்கே....
கரும்புலியாய் மாற்றி களத்தினைக்காட்டி
வீரமுட்டுகிறாள் அங்கெ...

அப்பாவிடம் பணம் பறிந்து அழகான உடைமாற்றி
அலைகிறது ஒரு சாதி இங்கே...
அக்காவின் மானம் காக்க ஆயுதத்தின் உடைமாற்றி
போராடும் தமிழ்சாதி அங்கே...

உண்மை வெளியாகும் போதெல்லாம்
உடன்பிறப்பே கவிதை செய்து...
ஒருகுடம்பத்தை காப்பவன் இங்கே...
ஊருசனம் தான்வாழ
உயிரையே பணையம்
வைக்கும்உன்னத தலைவன் அங்கே ....

காணுகின்ற இடமெல்லாம்
உயிரே பிரியும் ஓசை..
வெள்ளைக்கார பெண்மணியே
தீர்ந்ததா உன்னுடைய ஆசை ..

புகழுடை என்சாதியை
பூமி பந்தில் இருந்து
மொத்தமாய் துடைத்தெடுக்க...
எத்தனை நாள் காத்திருந்தீங்க.

படிகின்ற போதெல்லாம்
பாலுற்றி கொடுத்த என் தாயே-நான்
துடிகின்ற காரணத்தை
இங்கே வடிகின்றேன் கேள்..

திலீபன் ஏற்றிய தியாக நெருப்பு
எத்தனைநாள் நாள் எரியும் இம்மண்ணில்
இன்பமான ஈழதேசத்தை
எப்போது காண்பேன் என்கண்ணில்..

No comments:

Post a Comment