இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Wednesday, August 26, 2009

காலையில் கண்ட காணொளி...(26.08.2009)


கண்களை கடலாக்கியது
காலையில் கண்ட காணொளி...

சொந்த சகோதரனின் உயிர்
கண்ணெதிரே தவணைமுறையில்
சாவதை பலகீனமான இதையத்தால்
காணக்கூட முடியவில்லை ..

உயிரற்ற உடலை அலுவல்
பணிக்காக ஆய்வகம் சென்றேன் ....
மனிதம் தொலைத்த ஆராய்ச்சியில்
மனமின்றி மருவிக்கொண்டிருந்தது மனம் ...

கையறுநிலையில் நடைமுறை
வாழ்க்கைநகர்வதை விரும்பாத
நான் போராடிகொண்டிருந்தேன் ...

சிந்தனை சிறகுவிரிக்கும் போதெல்லாம்
காலையில் கண்ட காணொளி
கண்ணெதிரே வந்து இதயத்தை சிகப்பாகவும்
கண்களை கடலாகவும் மாற்றி
சென்று கொண்டிருந்தது ....

என் இதயத்தின் தேடல் இங்கே
இருப்பது கண்டு அழுகையும் கண்ணீரும் அதிகமானது ...

கண்ணெதிரே கற்ப்பிழந்த...
கண்ணியரை கண்டோம் ...
.கண்ணீர் விட்டு அழ கூட
காசு கேட்டது அதிகாரவர்க்கம்...

தொப்புள்கொடி உறவு...
துடிதுடிக்கும் போது கூட ...
போர்முரசு கொட்டி வீதிசெற்றோம் ...
வாக்குபிச்சை கேட்க்க...

கூப்பிடும் தூரத்திலே
கோடி சொந்தமிருந்தும்
வீதியெல்லாம் மிதந்ததே
என்சாதி பிணங்கலடா ....

ராஜபட்சேவின் புண் முறுவலின்
ராஜிவின் இழப்பின்
சோகத்தை தணித்தார் சோனியா ....

சோனியாவின் முந்திபுடித்து ..
பெற்ற அதிகாரத்தை பிள்ளைகளுக்கு
பந்திவத்தது ஒரு
பெயர்சொல்ல விரும்பாத மந்தி ....

வருவார் வளம் தருவார்
என ஏங்கி தவித்த என்சாதி இன்று
முள்வேலிகளில்
முடக்கி கிடக்கின்றது ....

எவர் வந்து மீட்டு எடுப்பார்
எனசாதி சொந்தங்களை ..
கண்ணில் கண்ணீரோடு
திசைபார்க்கும் என்நினைவுகள் ..

செய்தியெல்லாம்
சித்தரித்த சோகத்தை கூட
போலுதுபோக்கிர்க்கா மட்டுமே
புரட்டிபர்த்த கேவலம் ....இந்த
கேவலபிறப்பு படத்தை பாத்தால் மட்டும்
பதைக்கவா போகின்றது?
நெஞ்சில் விடுதலை வீரத்தை
விதைக்கவா போகின்றது ?

No comments:

Post a Comment