
ஒரு தரித்திரதிற்கு தோன்றிய
சரித்திர ஆசை...
நாடு ஆண்ட ஒரு இனத்தை
நடுகடலில் தள்ளிவிட்டு
மானம் உள்ள ஓரினத்தை
மண்ணோடு மண்ணாக்கி
தமிழனின் தன்மானத்தை
தாரைவார்த்து கொடுத்துவிட்டு
சிறப்பாக நடிக்கின்றது
செம்மொழி மாநாடு என்று...
மூச்சாய் மொழிவளர்த்த
மூதாதையர் பெயரை சொல்லி
தமிழெனும் அட்சயபத்ததிரத்தை
வாக்குபிச்சைக்காக ஏந்தி
வளம்வருகிறது...
ஊரெல்லாம் ஓலமிட்டு
ஒளியகூட இடமின்றி
ஒழிந்துபோன நம்மினத்தை
பார்த்து ரசித்து
பலிலித்த இந்த கிழம்
தமிழ்த்தாயின் மூத்தமகன்
தானென்று சொல்லிகொண்டு
தற்பெருமை பாடுகிறது ...
கற்ப்பிழந்த சகோதரி
கதறி அழுதபோது
வாக்கு எழும்பிர்க்காக
வாய்பிளந்து நின்றநாய்
கண்ணகி ரத ஊர்வலத்தை
கண்டு ரசிக்கின்றது...
கொட்டும் மழையிலே
குற்றுயிராய்
கொலையுயிராய்
முல்வேளிக்கிடையே
மூச்சுவிட்ட தமிழ் இனத்தின்
முனவல்களை
மூடிமறைத்து விட்டு
பறைசாற்றி சொல்கிறது
தமிழ் நடிகன் நானென்று...
கற்பழிப்பு வழக்கில்
கைதாக வேண்டியவன்
வரவேற்ப்பு
உரைநிகழ்த்தி
வாய்நிறைய
சிரிக்கின்றான்...
குண்டர் சட்டத்தில்
புலால் புகவேண்டியவன்
மாண்புமிகு
மகுடம்தரித்து
மகனாக
அமர்கின்றான்
விபச்சரார
விடுதியில் கூட
விலைபோக முடியாதவள்
கலாசார கண்மணியாய்
கனிவுடனே இருக்கின்றாள்...
நாடாண்ட
நமது இனம்
நாதி இன்றி தானிருக்க
கொல்லையடித்தகாசில்
கொட்டமடிகின்ற்றது
கோபாலபுரம்...
ஆடடா இந்த
அசிங்கத்தை
அவளும் பொறுப்பாளோ !
சாக்கடை விழுந்த பன்றி
அறிகாரத்தையும்
அலங்காரத்தையும்
அள்ளி பூசிக்கொண்ட
கதைகேட்டு
சிரிப்பாலோ!
என் தமிழ்த்தாய்
சிரிப்பாலோ !!
செம்மொழி மாநாடு...
நல்ல பதிவு கருணாநிதி அவன் இனிமெல் துரோகி இல்லை எதிரி.................
ReplyDeleteVery Nice..... Its really super..
ReplyDelete